ADDED : மே 15, 2025 11:42 PM

பண்ருட்டி: பண்ருட்டியில் அரசி யல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றும் பணி துவங்கியது.
தமிழகம் முழுதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது.
அதன்பேரில், பண்ருட்டி நகராட்சியில் தட்டாஞ்சாவடி, ஆண்டிக்குப்பம், விழமங்கலம், காந்தி ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள கொடிகம்பங்கள் கமிஷனர் கண்ணன் தலைமையில் கட்டட பிரிவு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் நேற்று அகற்றினர்.
மீதமுள்ள கொடிகம்பங்கள் இன்று அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


