Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பணம் வழங்காமல் பயனாளிகள் அலைகழிப்பு

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பணம் வழங்காமல் பயனாளிகள் அலைகழிப்பு

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பணம் வழங்காமல் பயனாளிகள் அலைகழிப்பு

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பணம் வழங்காமல் பயனாளிகள் அலைகழிப்பு

ADDED : மே 15, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
பண்ருட்டி: கணிசப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கியபின் தடைபோட்டதால் பயனாளிகள் 10மாதங்களாக அவதியடைந்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்,கணிசப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கடந்த 2024ம் ஆண்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கினர்.

இதில், ஆதிதிராவிடர் பகுதி செல்வம், சித்திரைசாவடிவடக்கு தெரு சாமுண்டேஸ்வரி கலியமூர்த்தி, ஊராட்சி அலுவலகம் எதிரில் உள்ள வச்சலா, திரவுபதியம்மன் கோவில் தெரு பூங்கோதைராமு, கணிசப்பாக்கம் ரெட்டியார் தெரு துரைகண்ணு, முத்துலட்சுமி ஆகிய 5 பயனாளிகள் தங்களின் குடிசை வீடுகளை பிரித்து அனுமதி வழங்கிய இடத்தில் கான்கிரீட் அடித்தளம் அமைக்கும் பணிகளை முடித்தனர்.

ஆனால், இதுவரை நடந்த வேலைக்கான பணமும், இரண்டாம் கட்ட கட்டுமான பணிக்கான பணமும் வழங்காமல் அதிகாரிகள் அலைகழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்னைக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'பணி ஆணை வழங்கியதைநம்பி வசிக்கும் குடிசை வீட்டை பிரித்து கான்கிரீட் வீடு கட்டுவதற்கான பேஸ்லெவல் பணிகளை முடித்தும் அதற்கான பணம் வழங்கவில்லை. இதனால் அடுத்த கட்ட பணிக்கு செல்ல முடியாமல் நடுத்தெருவில் நிற்கிறோம். இதற்கு தீர்வு காண கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us