முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 01, 2025 11:22 PM
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புலத்தில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடந்த விழாவில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் முன்னிலை வகித்தார். கட்டட பொறியியல் புல துறை தலைவர் மணிகுமாரி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் சென்னை இபரம்பரா டெக்னாலஜி நிறுவனர் மந்திரகுமார் பேசினார். அறிவியல்புல முதல்வர் ஸ்ரீராம் வாழ்த்திப் பேசினார்.
விழாவில், கலைப்புல முதல்வர் அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இணை இயக்குநர் சக்திவேல், பொறியியல் புல கணினி அறிவியல் துறை தலைவர்பவானி செய்திருந்தனர்.தகவல் தொழில்நுட்ப துறை துறை தலைவர்செல்வக்குமார் நன்றி கூறினார்.