ADDED : செப் 01, 2025 11:22 PM
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் கையெழுத்துப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
சென்னை மூன்றாம் தலைமுறை நிறுவனம் சார்பில் கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் ஓவியம் மற்றும் கையெழுத்துப் போட்டிகள் நடந்தது.
இப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.இவர்களுக்குபள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி அளவில் 10ம் வகுப்பு மாணவி இனியஸ்ரீ, ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்றார்.