/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தீ விபத்தில் பாதிப்பு எம்.எல்.ஏ., நிவாரணம் தீ விபத்தில் பாதிப்பு எம்.எல்.ஏ., நிவாரணம்
தீ விபத்தில் பாதிப்பு எம்.எல்.ஏ., நிவாரணம்
தீ விபத்தில் பாதிப்பு எம்.எல்.ஏ., நிவாரணம்
தீ விபத்தில் பாதிப்பு எம்.எல்.ஏ., நிவாரணம்
ADDED : செப் 15, 2025 02:23 AM

சேத்தியாத்தோப்பு: பேக்கரி தீப்பிடித்து எரிந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.
சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 35; இவர், ஆணைவாரி சாலையில் பேக்கரி நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் பேக்கரி கடையில் தீ விபத்து ஏற்பட்டு, பொருட்கள் எரிந்து சேதமானது.
இதையடுத்து அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மணிகண்டன் குடும்பத் திற்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.
மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், செஞ்சி லட்சுமி, மாவட்ட மகளிரணி ஜெயப்பிரியா, தெய்வராஜகுரு, ஸ்ரீதர், மாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.