ADDED : ஜன 28, 2024 05:01 AM
கடலுார் ; மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் செய்துள்ளார்.
கடலுார் அடுத்த சின்னகங்கனாங்குப்பம் முத்துசாமி 75; மண்பாண்ட தொழிலாளி. கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரை கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது மகன் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.