Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அப்பா, மகன் சண்டையை மறைக்க மாம்பழம் விற்கின்றனர்; வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி

அப்பா, மகன் சண்டையை மறைக்க மாம்பழம் விற்கின்றனர்; வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி

அப்பா, மகன் சண்டையை மறைக்க மாம்பழம் விற்கின்றனர்; வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி

அப்பா, மகன் சண்டையை மறைக்க மாம்பழம் விற்கின்றனர்; வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி

ADDED : ஜூலை 02, 2025 11:48 PM


Google News
சிதம்பரம் : கொரோனா காலத்திலேயே மக்களுக்காக களம் இறங்கி பணியாற்றிவர் முதல்வர் என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சிதம்பரத்திற்கு வரும் 14 ம் தேதி தமிழக முதல்வர் வருகை தரவுள்ளதால் விழா நடக்கும் இடங்களை வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் 14 ம் தேதி சிதம்பரம் வருகை தருகிறார். அதனை தொடர்ந்து 15 ம் தேதி. இளையபெருமாள் சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

மாம்பழ விவசாயிகளை பாதுகாக்ககாமல் அமெரிக்கா சென்றுள்ளார் அமைச்சர் என அன்புமணி கூறியதற்கு, பதில் அளிக்கையில். அப்பா மகன் சண்டையை மறைக்க, மாம்பழத்தை விற்கின்றனர். அவர்களுக்கு என்ன பிரச்னை என்ன என்று தெரிவியவில்லை. தி.மு.க., வை இருவருமே திட்டுகின்றனர். அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கலா, பதவி சண்டையான என தெரியவில்லை. அதை மறைக்க தி.மு.க.,மீது பழி போடுகின்றனர்.

மக்களுக்காக முதல்வர் உழைத்து வருகிறார். கொரோனா காலத்திலேயே மக்களுக்காக களம் இறங்கியவர் முதல்வர். அப்போது எந்த அரசியில் கட்சியினரும் களத்திற்கு வரவில்லை. இதில் இருந்தே மக்களுக்காக பணியாற்றுபவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் சேவையில் தி.மு.க., வினர் பலர் உயிரிழந்துள்ளனர்.

அ.தி.மு.க., வினர் யார் சார் என பைத்தியம் பிடித்து அலைகின்றனர். யார் என்பது, மக்களுக்கு தெரியும். மூன்றாண்டு கால உழைப்பிற்கு மக்கள் கொடுத்த சான்று, லோக்சபா தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி என்பதே. ஸ்டாலின் முதல்வர் ஆன பின்புதான், மக்கள் நல திட்டங்கள் மூலம் தி.மு.க.,ஆட்சியில் பொதுமக்களில் ஓவ்வொரு நபரும் பயனடைந்துள்ளனர். உரிமைத்தொகை தொடர்ந்து தர முடியாது என எடப்பாடி சொன்னார். ஆனால் தொடர்ந்து கொடுத்து வருகிறோர்.

ஓரணியில் தமிழ்நாடு குறித்து கூறுகையில், அனைத்து கட்சியினரையும் ஓரணியில் இணைப்பதே எங்கள் நோக்கம், மக்களுக்காக பணியாற்றியுள்ளோம். எங்கள் சாதனைகளை கூறி வீடு வீடாக சென்று எங்களுடன் வாருங்கள் என கேட்கிறோம். எந்த கட்சியினராக இருந்தாலும் தி.மு.க., வின் சாதலைகளை சொல்லி ஆதரவு கேட்டு செல்வோம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us