/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாலையை சீரமைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்சாலையை சீரமைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சாலையை சீரமைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சாலையை சீரமைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சாலையை சீரமைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 04, 2024 04:01 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே குழாய் பதிக்க சேதப்படுத்தப்பட்ட சாலையை சீரமைக்க கோரி, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே வையூர், காட்டுக்கூடலுார், கண்டியாமேடு மற்றும் மண்டபம் பகுதி மக்கள், விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலை, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டது. அதன் பிறகு சாலை சீரமைத்து கொடுக்கவில்லை.
இதனால், சுற்றுபுற விவசாயிகள் சாலையின்றி பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால், உடனடியாக சாலையை சீரமைத்து தரக்கோரி, சிதம்பரம் காந்தி சிலை அருகே பாண்டியன் தலைமையில், அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வையூர், காட்டுக்கூடலுார், கண்டியாமேடு, மண்டபம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணியிடன், மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.