/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சம்பா நெல் நடவு பணி : விவசாயிகள் தீவிரம் சம்பா நெல் நடவு பணி : விவசாயிகள் தீவிரம்
சம்பா நெல் நடவு பணி : விவசாயிகள் தீவிரம்
சம்பா நெல் நடவு பணி : விவசாயிகள் தீவிரம்
சம்பா நெல் நடவு பணி : விவசாயிகள் தீவிரம்
ADDED : அக் 20, 2025 09:39 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு சுற்று வட்டார பகுதிகளில் சம்பா நெல் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கீரப்பாளையம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், கம்மாபுரம் உள்ளிட்ட வட்டாரங்களில் சம்பா நடவு பணிகளுக்கான நாற்று விடும் பணிகள் கடந்த ஆவணி பட்டத்தில் துவங்கியது. அதனை தொடர்ந்து இயந்திர நடவு பணிகளை கடந்த 20 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் துவங்கி தீவிரமாக செய்து வந்தனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இயந்திர நடவு செய் யப்பட்டுள்ள தாழ்வான நிலங்களில் பயிர்கள் மூழ்கியது. இயந்திர நடவு வயல்களில் சில தாழ்வான பகுதிகளில் வயல்களில் மழை நீர் புகுந்து நெற் பயிர்கள் அழுகி சேதமானது.
இந்நிலையில் புரட்டாசி பட்டத்தில் நடவு பணிகளை மேற்கொள்ள முடியாத விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடவு பணிகளை செய்து வருகின்றனர்.
இரண்டு நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் நாற்று பறித்தல், நடவு செய்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


