/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நேரடி கொள்முதல் நிலையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு நேரடி கொள்முதல் நிலையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
நேரடி கொள்முதல் நிலையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
நேரடி கொள்முதல் நிலையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
நேரடி கொள்முதல் நிலையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 11, 2025 11:23 PM

புவனகிரி: புவனகிரியில் தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவனகிரி பகுதியில் ஆண்டுதோறும் சம்பா அறுவடைக்கு பின் குருவை சாகுபடி மேற்கொள்வது வழக்கம். அறுவடை முடிந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம்.
ஆனால், இந்தாண்டு கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்ப்பில் விவசாயிகள் நெல்மணிகளை புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெரு அருகாமையில் உள்ள நிரந்தர கொள்முதல் நிலைய குடோனில் கொட்டி பாதுகாத்து வருகின்றனர்.
ஆனால், இதுவரை கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்னர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.