/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பயணியர் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு பயணியர் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
பயணியர் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
பயணியர் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
பயணியர் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 21, 2025 11:28 PM
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் வில்லியநல்லுார், பால்வாத்துண்ணான், பூவாலை, சிலம்பிமங்களம், ராமநாதன்குப்பம், பஞ்சங்குப்பம், அத்தியநல்லுார், கரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மாணவ, மாணவிகள், கூலி தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் சிதம்பரம் மற்றும் கடலுார் பகுதிகளுக்கு செல்ல தினமும் பஸ் ஏறி செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியின் போது, புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை புதிய நிழற்குடை கட்டவில்லை.
இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, நிழற்குடை அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.