ADDED : ஜூன் 28, 2025 12:24 AM

திட்டக்குடி : திட்டக்குடி திருக்குறள் பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
திட்டக்குடியில் திருக்குறள் பேரவை புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் ஆணையர்களாக சிவராமன், ராதாகிருஷ்ணன் செயல்பட்டனர். பேரவையின் தலைவராக சீனிவாசன், செயலாளராக திருநாவுக்கரசு, பொருளாளராக அன்பானந்தன், ஆலோசகராக வெங்கடாசலம், துணைத் தலைவர்களாக கோவிந்தன், சின்னசாமி தேர்வு செய்யப்பட்டனர்.
துணை செயலாளர்களாக முருகேசன், பாஸ்கரன், தணிக்கையாளர்களாக ராமலிங்கம், வைத்திலிங்கம், நுாலக பொறுப்பாளராக செல்வம், செயற்குழு உறுப்பினர்களாக அன்பானந்தன், வேல்முருகன், சுப்பிரமணியன், பெருமாள், சரஸ்வதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.