/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 2 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம் 2 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்
2 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்
2 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்
2 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்
ADDED : ஜூன் 28, 2025 12:23 AM

திட்டக்குடி : திட்டக்குடி அருகே மின்கசிவு காரணமாக 2 கூரைவீடுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திட்டக்குடி அடுத்த சிறுமுளை காலனியைச் சேர்ந்தவர் பத்மநாபன்,50; இவரது குடிசை வீடு நேற்று மாலை 5:00 மணிக்கு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. அப்போது, காற்று பலமாக வீசவே அருகில் உள்ள குமார் என்பவரது குடிசை வீட்டிற்கும் தீ பரவியது.
அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் பத்மநாபன் வீட்டில் வைத்திருந்த 5 சவரன், 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.