ADDED : ஜன 28, 2024 04:19 AM
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அருகே இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயராம் மனைவி சரஸ்வதி, 87; இவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இவரது கண்களை தானமாக வழங்குவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அதன்பேரில், சமூக ஆர்வலர் பாஸ்கர் மூலம் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் இறந்த மூதாட்டியின் கண்களை தானமாக பெற்றனர். கணவர் ஜெயராம், மகன்கள் சுந்தரராஜ், ஸ்ரீதர் உடனிருந்தனர்.