/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெய்வேலியில் மத்திய அரசுக்கு தே.மு.தி.க.,வினர் நன்றிநெய்வேலியில் மத்திய அரசுக்கு தே.மு.தி.க.,வினர் நன்றி
நெய்வேலியில் மத்திய அரசுக்கு தே.மு.தி.க.,வினர் நன்றி
நெய்வேலியில் மத்திய அரசுக்கு தே.மு.தி.க.,வினர் நன்றி
நெய்வேலியில் மத்திய அரசுக்கு தே.மு.தி.க.,வினர் நன்றி
ADDED : ஜன 28, 2024 05:02 AM

நெய்வேலி : மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்த மத்திய அரசுக்கு தே.மு.தி.க., மற்றும் நாயுடு சங்கம் சார்பில்நன்றி தெரிவிக்கப்பட்டது.
நெய்வேலி, இந்திரா நகரில் விஜயகாந்த் படத்திற்கு பண்ருட்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்துமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தே.மு.தி.க., மாவட்ட தலைவர் ராஜாராம், பொருளாளர் ராஜ், தமிழ் நாடு நாயுடுகள் சமுதாய முன்னேற்ற நலச்சங்க மாநிலத் தலைவர் பாபு,செயலாளர் நாகராஜ் நாயுடு, பொருளாளர் சந்திரபாபு நாயுடு, மாவட்ட தலைவர் வெங்கடேஷ், பிரபாகரன், பொருளாளர் சீனிவாசன் மற்றும்நாயுடு சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், முரளி, ராம்குமார், விஜயகுமார், கமலக்கண்ணன், ஆழ்வார் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாயுடு சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.