/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நேரடி நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் மனுநேரடி நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் மனு
நேரடி நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் மனு
நேரடி நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் மனு
நேரடி நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : ஜன 06, 2024 06:19 AM
கடலுார் : பூதங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் முகுந்தன் கொடுத்துள்ள மனு:
சிதம்பரம் அடுத்த பூதங்குடியில் வீராணம் ஏரி பாசனம் மூலம் 2023-24ம் ஆண்டிற்கான சம்பா நெல் 250 ஏக்கருக்கு மேலும், அள்ளூர், பரிபூரணநத்தம் கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேலும் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து பயனடைய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பூதங்குடியில் திறக்க வேண்டும்.
இல்லையென்றால், தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து விவசாயிகள் ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு ஆளாகக்கூடும்.