ADDED : ஜன 10, 2024 11:15 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை ஊராட்சியில் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் தென்னங்கன்று வழங்கப்பட்டது.
வாழைக்கொல்லை ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவி ஜெயந்திகுரளரசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் புகழேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். வேளாண் உதவி அலுவலர் சிவக்குமார் வரவேற்றார்.
கீரப்பாளையம் வட்டார வேளாண் அலுவலர் ராயப்பன் கிராம மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினார். கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.