/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் ஜெய் மஹாவீர் ஜூவல்லரி நாகாபரணம், வெள்ளி கிரீடம் வழங்கல்கடலுார் ஜெய் மஹாவீர் ஜூவல்லரி நாகாபரணம், வெள்ளி கிரீடம் வழங்கல்
கடலுார் ஜெய் மஹாவீர் ஜூவல்லரி நாகாபரணம், வெள்ளி கிரீடம் வழங்கல்
கடலுார் ஜெய் மஹாவீர் ஜூவல்லரி நாகாபரணம், வெள்ளி கிரீடம் வழங்கல்
கடலுார் ஜெய் மஹாவீர் ஜூவல்லரி நாகாபரணம், வெள்ளி கிரீடம் வழங்கல்
ADDED : ஜன 08, 2024 05:57 AM

கடலுார்: கடலுார் ஜெய் மஹாவீர் ஜூவல்லரி நிறுவனம் சார்பில் சதீஷ்குமார் நினைவாக ஊர்வலம் நடந்தது.
ஜெய் மஹாவீர் ஜூவல்லரி உரிமையாளர் தில்சுக்மல் மேத்தா தலைமை தாங்கினார். ஆர்.எம்.,மஹாவீர் ஜூவல்லரி உரிமையாளர்கள் ஆனந்தகுமார், விஜயகுமார், ஸ்டார் மஹாவீர் சுசில்குமார், சுமித்குமார் முன்னிலை வகித்தனர்.
பின், திருப்பாதிரிப்புலியூர் ஜெய் மஹாவீர் ஜூவல்லரியில் இருந்து குதிரை ரதத்தில் தேரடி தெரு வழியாக ஊர்வலமாக சென்று பாடலீஸ்வரருக்கு வெள்ளியில் நாகாபரணமும், பெரியநாயகி அம்மனுக்கு வெள்ளி கிரீடமும் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஸ்ரீவள்ளி விலாஸ் உரிமையாளர் பாலு, ஆத்மவள்ளிநாதன், விருத்தாசலம் ஸ்ரீஜெயின் ஜூவல்லரி அகர் சந்த், பொறியாளர் சந்தானகிருஷ்ணன், பாதிரிக்குப்பம் ஊராட்சித் தலைவர் சரவணன், சக்திவேல், டாக்டர் நாராயணன் மற்றும் ஜெயின் சமுதாயத்தினர், நகை கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.