/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிரைம் கார்னர் மோசடி பேர்வழி சிக்கினார் கிரைம் கார்னர் மோசடி பேர்வழி சிக்கினார்
கிரைம் கார்னர் மோசடி பேர்வழி சிக்கினார்
கிரைம் கார்னர் மோசடி பேர்வழி சிக்கினார்
கிரைம் கார்னர் மோசடி பேர்வழி சிக்கினார்
ADDED : செப் 12, 2025 02:01 AM

கடலுார்: கடலுார் மாவட்டம், வடலுாரை சேர்ந்த தினேஷ், 34, தனக்கு சொந்தமான காரை விற்க முயன்ற போது, அதே ஊரை சேர்ந்த தமிழ் மூலம், சென்னை எஸ்.பி., கார்ஸ் நிறுவன உரிமையாளர் சென்னை கே.கே., நகர் தமிழரசன் அறிமுகமானார்.
அவர் தினேஷ் காரை 18 லட்சம் ரூபாய்க்கு விற்று தருவதாக கூறி எடுத்து சென்றார். ஆனால், 85,000 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, மீதி 17 லட்சத்து 15,000 ரூபாயை தராமல் ஏமாற்றி வந்தார். இதேபோல், காட்டுமன்னார்குடி மெய்யாத்துாரை சேர்ந்த கோகுலகண்ணனுக்கு வாகனம் வாங்கி தருவதாக 12 லட்சத்து 40,000 ரூபாய், சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ் காரை விற்று தருவதாக 3.20 லட்சம் ரூபாய் அவர் ஏமாற்றியது தெரியவந்தது. தமிழரசனை கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.