/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிரிக்கெட் விளையாட்டில் வீரர் மயங்கி விழுந்து சாவு கிரிக்கெட் விளையாட்டில் வீரர் மயங்கி விழுந்து சாவு
கிரிக்கெட் விளையாட்டில் வீரர் மயங்கி விழுந்து சாவு
கிரிக்கெட் விளையாட்டில் வீரர் மயங்கி விழுந்து சாவு
கிரிக்கெட் விளையாட்டில் வீரர் மயங்கி விழுந்து சாவு
ADDED : ஜூன் 16, 2025 12:51 AM

மந்தாரக்குப்பம் : ஊமங்கலம் அடுத்த இருப்பு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர் தீடிரென மயங்கி விழுந்து இறந்தார்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த பெரியகாப்பங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த தாமரைக்கனி,33; இவர், அருகில் உள்ள இருப்பு கிராமத்தில் நேற்று மதியம் 1:40 மணிக்கு கிரிக்கெட் போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடன், அருகில் இருந்தவர்கள் தாமரைக்கனியை மீட்டு இருப்பு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், தாமரைக்கணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.