/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ 1.90 லட்சம் மதிப்பு காப்பர் ஒயர் திருட்டு ரூ 1.90 லட்சம் மதிப்பு காப்பர் ஒயர் திருட்டு
ரூ 1.90 லட்சம் மதிப்பு காப்பர் ஒயர் திருட்டு
ரூ 1.90 லட்சம் மதிப்பு காப்பர் ஒயர் திருட்டு
ரூ 1.90 லட்சம் மதிப்பு காப்பர் ஒயர் திருட்டு
ADDED : மே 22, 2025 11:38 PM
கடலுார்: ரெட்டிச்சாவடி அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்து 1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயரை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை பைபாஸ் ரோட்டின் அருகில் உள்ள மின்வாரிய டிரான்ஸ்பார்மரில் இருந்து 225 கிலோ எடையுள்ள காப்பர் ஒயர் கடந்த இரண்டு நாட்களில் திருடு போனது. அதன் மதிப்பு ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும்.
இதேப் போன்று, கீழ்குமாரமங்கலம், சிரஞ்சீவி நகரில் இருந்த மின்வாரிய டிரான்ஸ்பார்மரில் 75 கிலோ எடையுள்ள காப்பர் ஒயரை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதன் மதிப்பு 47 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும்.
இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.