/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாதனை மாணவர்களுக்கு பரிசு பிராமணர் சங்கம் அழைப்பு சாதனை மாணவர்களுக்கு பரிசு பிராமணர் சங்கம் அழைப்பு
சாதனை மாணவர்களுக்கு பரிசு பிராமணர் சங்கம் அழைப்பு
சாதனை மாணவர்களுக்கு பரிசு பிராமணர் சங்கம் அழைப்பு
சாதனை மாணவர்களுக்கு பரிசு பிராமணர் சங்கம் அழைப்பு
ADDED : மே 22, 2025 11:37 PM
கடலுார்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை படைத்த பிராமணர் சமூக மாணவர்கள் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என, கடலுார் மஞ்சக்குப்பம் கிளை பிராமணர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளர் திருமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிராமணர் சமூக மாணவ, மாணவியருக்கு பிராமணர் சங்கம் சார்பில் பரிசு வழங்கப்பட உள்ளது.
கடலுார் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், திருவந்திபுரம், சாவடி, கடலுார் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பிராமணர் சமூக மாணவ, மாணவிகள், 31 ஏ/1, 64, பாஷ்யம் தெரு, மஞ்சக்குப்பம், கடலுார் என்ற முகவரிக்கு கடிதம் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பலாம்.
இவ்வாறு அறக்கையில் கூறப்பட்டுள்ளது.