ADDED : பிப் 06, 2024 04:28 AM

கடலுார், : கடலுார் மாவட்ட காங்., கட்சி சார்பில் லோக் சபா தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கடலுார் டவுன் ஹாலில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரங்கமணி, குமார், ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத் தலைவர் மற்றும் லோக் சபா தொகுதி பொறுப்பாளர் மணிரத்தினம் சிறப்புரையாற்றினார்.
இதில், கடலுார் லோக் சபா தொகுதியை கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும், கடலுாரில் காமராஜர் சிலையை சீரமைக்க வேண்டும், கடலுார் மாநகராட்சியில் தரமான சாலைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன.
கூட்டத்தில், நகர தலைவர்கள் முருகன், ரவிக்குமார், இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் கமல், வட்டாரத் தலைவர்கள் சீதாராமன், ராஜா, ராமகிருஷ்ணன், ஜனார்த்தனன், அலெக்ஸ் மற்றும் இளைஞர் காங்., மாவட்ட துணை தலைவர் வேலு, வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.