/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர்கள் திருட்டு: மாணவர் கைது பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர்கள் திருட்டு: மாணவர் கைது
பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர்கள் திருட்டு: மாணவர் கைது
பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர்கள் திருட்டு: மாணவர் கைது
பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர்கள் திருட்டு: மாணவர் கைது
ADDED : ஜூன் 26, 2025 01:44 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ரூ 5 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்களை திருடிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணிணி பொறியியல் துறையில் நான் முதல்வன் திட்டத்திற்கு வழங்கப்பட்ட 15 கம்ப்யூட்டர்கள் திருடுபோனதாக துறைத் தலைவர் செல்வகுமார் அண்ணாமலை நகர் போலீசில் புகார் அளித்தார். ்.
இதன் பேரில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்துவந்தனர். இதில் பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டய படிப்பு படித்து வரும் நெய்வேலி ஊமங்கலம் அரசகுழி பகுதியைச் சேர்ந்த லிவின்அஜய்,18; என்பவர் கம்ப்யூட்டர்களை திருடியது தெரியவந்தது. மேலும் இவர் திருடிய கம்ப்யூட்டர்களை ஓஎல்எக்ஸிலும், சிலரிடம் நேரிலும் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அண்ணாமலை நகர் போலீசார் லிவின் அஜய்,18: கைது செய்து, கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர்களின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாகும்.