ADDED : மார் 22, 2025 08:53 PM
புவனகிரி : புவனகிரி அருகே டாஸ்மாக் மதுபானக்கடையில் முதல்வர் படத்தை ஒட்டிய, 2 பெண்கள் உள்ளிட்ட 10 பா.ஜ., வினர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
புவனகிரி அருகே குறியாமங்கலத்தில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று முன் தினம் மாலை பா.ஜ., பரங்கிப்பேட்டை ஒன்றிய வடக்குத் தலைவர் சுரேஷ் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட 10 பேர், முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டியதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் மதியழகன் கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.