/உள்ளூர் செய்திகள்/கடலூர்/லாரி மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலிலாரி மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி
லாரி மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி
லாரி மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி
லாரி மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி
ADDED : ஜன 08, 2024 05:42 AM

திட்டக்குடி: ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வடக்காம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் இளங்கோவன்,31. இவர் நேற்று காலை திண்டுக்கல் நேருஜி நகரைச் சேர்ந்த பாலன்,65, என்பவருடன் காரில் சென்னைக்கு சென்றனர். காரை பாலன் ஓட்டிவந்தார்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ராமநத்தம் அருகிலுள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனைத்தான்டி, எதிர்ப்புறம் சாலையில் வந்துகொண்டிருந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் காரை ஓட்டிவந்த பாலன், படுகாயமடைந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இளங்கோவன், சிகிச்சை பலனின்றி பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் இறந்தார்.
விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
போலீஸ் விசாரணையில் கார் டிரைவரான இளங்கோவனுக்கு சிறிதுநேரம் ஓய்வு கொடுக்கும் பொருட்டு பாலன் காரை ஓட்டிவந்தது தெரிந்தது.