/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முந்திரியில் கொத்து கொத்தாய் பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சிமுந்திரியில் கொத்து கொத்தாய் பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி
முந்திரியில் கொத்து கொத்தாய் பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி
முந்திரியில் கொத்து கொத்தாய் பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி
முந்திரியில் கொத்து கொத்தாய் பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 11, 2024 10:46 PM

பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில் முந்திரி மரத்தில் பூக்கள் வைக்க துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் 30 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவில் முந்திரி பயிரிடப்பட்டுள்ளது. மானாவாரி பயிராக உள்ள முந்திரி மரங்களில் ஆண்டுக்கு ஒரு முறை தை மாதங்களில் பூக்கள் வைத்து மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் முந்திரி பழம்,முந்திரி கொட்டை அறுவடைக்கு தயராகி விற்பனைக்கு வரும்.
இந்த ஆண்டு 70 சதவீதம் முந்திரி மரங்களில் பூக்கள் வைக்க துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு போதிய அளவில் மழை இல்லாததால் பூக்கள் வைக்கும் அளவிற்கு முந்திரி கொட்டைகள் உற்பத்தி வருமா என்கிற கேள்வியும் விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
முந்திரி அறுவடை சீசன் ஆரம்பித்ததும், முந்திரி கொட்டைகள் உற்பத்தி குறித்த விபரம் தெரிந்துவிடும்.