ADDED : மார் 22, 2025 08:43 PM
கடலுார்: கடலுார் அடுத்த செல்லஞ்சேரியை சேர்ந்தவர்பெருமாள்,37. இவரும், இவரது மனைவியும் புதுச்சேரிகோர்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிகின்றனர். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குசென்றனர். மதியம் 1 மணியளவில் இருவரும் வீட்டிற்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 20ஆயிரம்ரொக்கம் மற்றும் வெள்ளிக் கொலுசு திருடு போனது தெரிந்தது.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.