Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஊசுட்டேரியில் பறவைகள் கணக்கெடுப்பு

ஊசுட்டேரியில் பறவைகள் கணக்கெடுப்பு

ஊசுட்டேரியில் பறவைகள் கணக்கெடுப்பு

ஊசுட்டேரியில் பறவைகள் கணக்கெடுப்பு

ADDED : ஜன 28, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
வானூர் : ஊசுட்டேரியில், நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீட்டரில் ஊசுட்டேரி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு புதுச்சேரி அரசு, ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, புதுச்சேரி பகுதியில் 390 ஹெக்டேரும், தமிழக பகுதியில் 410 ஹெக்டேர் பரப்பில் உள்ளது.

தமிழக அரசும், ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. இங்கு, பொதுவாக நவம்பர் முதல் பிப்ரவரி வரை உலகம் முழுவதும் இருந்து பறவைகள் வருகின்றன. சில பறவைகள் இங்கேயே இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

இந்நிலையில், விழுப்புரம் வனக்கோட்டம், திண்டிவனம் வனச்சரக அதிகாரிகள், நேற்று நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு பணியை துவக்கினர்.

விழுப்புரம் கலெக்டர் பழனி துவக்கி வைத்து பேசுகையில், 'தமிழ்நாடு வனத்துறையின் மூலம் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு, தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது.

பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊசுடு மற்றும் கழுவெளி சரணாலய பகுதிகளில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், 120க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது, 12 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு, இன்று (28ம் தேதி) முதல் நடக்கிறது.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக 'பேர்ட்ஸ் ஆப் ஐஸ்' என்ற பறவைகளின் கண்களை உள்ளடக்கிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது' என்றார்.

நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷி நிகம், யூனிவெர்செல் எக்கோ பவுண்டேஷன் இயக்குநர் டாக்டர் பூபேஷ் குப்தா, வானூர் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, வனச்சரக அலுவலர் புவனேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us