/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு
முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு
முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு
முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு
ADDED : ஜூன் 16, 2025 12:49 AM
கடலுார் : கடலுார் அடுத்த தாமரைக்குளம் ஹெல்ப்பேஜ் இந்தியா நிறுவனத்தில் முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஹெல்ப்பேஜ் இந்தியா இணை இயக்குனர் சத்தியபாபு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தயாநிதி வரவேற்றார். திட்ட மேலாண்மை அலுவலக தலைவர் ராமலிங்கம் பேசினார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சித்ரா, 'முதியோர்கள் பற்றி தலைமுறைக்கு இடையே ஆன புரிதல்' என்ற தலைப்பில் நாடு முழுவதுமாக எடுக்கப்பட்ட விவரங்களின் அறிக்கை வெளியீட்டார்.
இதனை அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் குமார் பெற்றுக்கொண்டார். சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, வழக்கறிஞர்கள் அமுதவல்லி, ஜோதிலிங்கம் தலைமையில் பள்ளி மாணவர்கள் முதியோர் வன்கொடுமைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பெரியார் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் அருள்தாஸ், விளையாட்டு துறை குமணன், மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு தலைவர் பாஸ்கர், செந்தில்குமார் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் பாரத்வேல் நன்றி கூறினார்.