/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தம் அருகே துணிகரம் மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தம் அருகே துணிகரம்
மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தம் அருகே துணிகரம்
மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தம் அருகே துணிகரம்
மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தம் அருகே துணிகரம்
ADDED : செப் 08, 2025 11:21 PM
ராமநத்தம் : ராமநத்தம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி, காட்டுக்கொட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி அம்மணி, 60; நேற்று காலை 9:30 மணியளவில் தனது வீட்டிலிருந்து அதே பகுதியிலுள்ள ஏரிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிக்காக நடந்த சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே மோட்டார் பைக்கில் பின்னால் வந்த மர்ம நபர், அம்மணி கழுத்தில் அணிந்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை சவரன் செயினை பறித்து தப்பிச் சென்றார். ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.