/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிதம்பரம் பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புசிதம்பரம் பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சிதம்பரம் பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சிதம்பரம் பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சிதம்பரம் பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : பிப் 06, 2024 04:32 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், 1974 ம் ஆண்டு பொறியியல் படித்த முன் னாள் மாணவர்கள், பொன்விழா ஆண்டையொட்டி சந்தித்த நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் 1974ல் படித்த மாணவர்கள் தங்கள் பொன்விழா ஆண்டை, கடந்த 30ம் தேதி கொண்டாடினர்.
பல்கலைகழக பொறியியல் புல வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொறியியல் துறை புல முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாணவர் ராமதாஸ் வரவேற்றார். துணைவேந்தர் கதிரேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தற்போதைய மாணவர்களுக்கு, தங்களின் அனுபவத்தையும், பயிற்சிகளையும் தர அழைப்பு விடுத்து பேசினார்.
முன்னாள் பேராசிரியர்கள் பைரவன், குஞ்சித பாதம், வள்ளியப்பன் சிறப்புரையாற்றினர். 1974 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.