/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஓட்டுச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனைஓட்டுச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை
ஓட்டுச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை
ஓட்டுச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை
ஓட்டுச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை
ADDED : ஜன 05, 2024 12:27 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், திட்டக்குடி தனி தொகுதி மற்றும் விருத்தாசலம் சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பான, ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
விருத்தாசலம், திட்டக் குடி தொகுதிகளுக்கு உட்பட்ட தாசில்தார்கள் திட்டக்குடி ஜெயந்தி, விருத்தாசலம் அந்தோணிராஜ், தேர்தல் துணை தாசில்தார்கள் முருகேஸ்வரி, சீனிவாசன், வேல்முருகன் மற்றும் இரண்டு தொகுதிகளில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடந்த 2019, 2021ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் ஓட்டுச்சாவடி மையத்தில் நடந்த பிரச்னைகள், பதட்டமான ஓட்டுச்சாவடிகள், மிகவும் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் ஆலோசனை நடத்தினார்.
மேலும் ஓட்டுச்சாவடி மையங்கள் நிர்ணயிப்பது குறித்த தகவல்களை திரட்டி விரைவில் அனுப்பி வைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.