/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பஸ் படியில் சாகச பயணம்; மாணவர்களுக்கு அறிவுரை பஸ் படியில் சாகச பயணம்; மாணவர்களுக்கு அறிவுரை
பஸ் படியில் சாகச பயணம்; மாணவர்களுக்கு அறிவுரை
பஸ் படியில் சாகச பயணம்; மாணவர்களுக்கு அறிவுரை
பஸ் படியில் சாகச பயணம்; மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : ஜூன் 14, 2025 02:22 AM

கடலுார் : கடலுாரில் பஸ் படியில் தொங்கிய படி சாகச பயணம் செய்த மாணவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கினர்.
கடலுார் மாநகரில் உள்ளி பள்ளிகளில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் தினசரி அரசு டவுன் பஸ்சில் தங்கள் ஊர்களில் இருந்து பள்ளிக்கு வந்து படித்துவிட்டு, மீண்டும் மாலை அரசு டவுன் பஸ்களில் திரும்பிச் செல்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அரசு பஸ்கள் போதுமான அளவு இயக்கப்படாததால், கூட்டம் நிரம்பி வழியும் பஸ்களில் மாணவர்கள் படியில் தொங்கியபடியே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
சில நேரங்களில் பஸ்சில் இடம் இருந்தும், மாணவர் கெத்து காட்டுவதற்காக படியில் நின்ற படியும், தொங்கிய படியும் பயணக்கின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவர், படியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
நேற்று மாலை நெல்லிக்குப்பம் ரோடு வழியாக வந்த அரசு பஸ்சில் மாணவர்கள் படியில் தொங்கியபடியே வந்தனர். கடலுார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார், பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினர்.