/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் தொகுதி தேர்தல் முடிவால் அ.தி.மு.க., பா.ம.க., 'அப்செட்': இறுதி சுற்று வரையில் காங்., வேட்பாளர் முன்னிலை கடலுார் தொகுதி தேர்தல் முடிவால் அ.தி.மு.க., பா.ம.க., 'அப்செட்': இறுதி சுற்று வரையில் காங்., வேட்பாளர் முன்னிலை
கடலுார் தொகுதி தேர்தல் முடிவால் அ.தி.மு.க., பா.ம.க., 'அப்செட்': இறுதி சுற்று வரையில் காங்., வேட்பாளர் முன்னிலை
கடலுார் தொகுதி தேர்தல் முடிவால் அ.தி.மு.க., பா.ம.க., 'அப்செட்': இறுதி சுற்று வரையில் காங்., வேட்பாளர் முன்னிலை
கடலுார் தொகுதி தேர்தல் முடிவால் அ.தி.மு.க., பா.ம.க., 'அப்செட்': இறுதி சுற்று வரையில் காங்., வேட்பாளர் முன்னிலை
ADDED : ஜூன் 04, 2024 11:56 PM
கடலுார்: கடலுார் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் முதல் சுற்றில் துவங்கி, இறுதி சுற்று வரையில், காங்., வேட்பாளர் முன்னிலையில் இருந்து, வெற்றி பெற்றதால், எதிரணியில் போட்டியிட்ட அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., வேட்பாளர்கள் மற்றும் அவரது கட்சியினர் பெரிதும் 'அப்செட்' ஆகினர்.
கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி மணிவாசகன் உள்ளிட்ட 19 பேர் போட்டியினர்.
கடலுார் தொகுதியை தி.மு.க., அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தது. எதிரணியில் அ.தி.மு.க., வும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., வுக்கு தாரை வார்த்தது. இவர்களை எதிர்கொள்ள பா.ஜ,., கூட்டணியில் உள்ள பா.ம.க., வின் ஸ்டார் வேட்பாளராக திரைப்பட இயக்குனர் தங்கரபச்சானை களமிறக்கியது.
இதில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் தொகுதிக்கு புதுசு, காங்., நிர்வாகிகளை அனுசரித்து செல்லாமை, பிரசாரத்தில் ஈடுபடும் கட்சிக்காரர்களிடம் சிக்கனத்தை கடைபிடிப்பது போன்றவையால் எதிரணியினர் இதை எளிதாக முறியடித்து வெற்றி பெற்றுவிடலாம் என, அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., கட்சிகள் கணக்குப் போட்டன.
தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை எப்படியும் வெற்றி பெற செய்ய வேண்டும் என அ.தி.மு.க., கடுமையாக பிரசாரத்தில் ஈடுபட்டது. அக்கட்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத், தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளரான அருண்மொழித்தேவன் ஆகியோர் இரவு பகலாக பிரசாரம் செய்தனர். பிரசாரத்தின்போது மக்களிடம் கிடைத்த உணர்ச்சி பெருக்கால் வெற்றி உறுதி என, நம்பினர்.
அதேபோல், பா.ம.க, சார்பில் போட்டியிட்ட தங்கர்பச்சான் இம்மாவட்டத்தை சேர்ந்தவர். மேலும் கடலுார் மாவட்டத்தில் அதிகளவில் வன்னியர் சமுதாய மக்கள் வசிப்பதால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என கணக்கு போட்டனர். ஆனால், கடலுார் தொகுதி மக்களின் தீர்ப்பு வேறு விதமாக அமைந்துள்ளது.
ஆளும் தி.மு.க., வின் கூட்டணி கட்சியான காங்., கட்சிக்கு மக்கள் 4,55,053 ஓட்டுகள் அளித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
ஒவ்வொரு சுற்றிலும் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஏறுமுகமாகவே இருந்தார். ஒரு சுற்றில் கூட பின்னடைவு ஏற்படவில்லை. இதனால், எதிரணியில் போட்டியிட்ட தே.மு.தி.க., மற்றும் பா.ம.க., வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள், கட்சியினர் பெரிதும் அப்செட் ஆகினர். சிலர் 'மூட் அவுட்' ஆகி, ஒட்டு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினர்.