/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு அரசு கல்லுாரியில் 2ம் தேதி சேர்க்கை சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு அரசு கல்லுாரியில் 2ம் தேதி சேர்க்கை
சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு அரசு கல்லுாரியில் 2ம் தேதி சேர்க்கை
சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு அரசு கல்லுாரியில் 2ம் தேதி சேர்க்கை
சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு அரசு கல்லுாரியில் 2ம் தேதி சேர்க்கை
ADDED : மே 30, 2025 05:56 AM
கிள்ளை:சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் இணைய வழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்க்கை நடக்கிறது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் லலிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் 2025-2026ம் கல்வியாண்டுக்கான இணைய வழியில் விண்ணப்பித்த இளநிலை முதலாமாண்டு இளங்கலை, இளமறிவியல் மற்றும் வணிகவியல் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சிறப்பு இட ஒதுக்கீடு (உடல் ஊனமுற்றோர், விளையாட்டு, ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிதாரர்கள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் அந்தமான் நிக்கோபர்) போன்ற மாணவர் சேர்க்கை வரும் 2 மற்றும் 3ம் தேதி நடக்கிறது. சேர்க்கைக்கு காலை 9:00 மணிக்குள் வர வேண்டும்.
4ம் தேதி பி.எஸ்.சி., கணிதம் (தமிழ் வழி மற்றும் ஆங்கிலவழி), இயற்பியல், கணினி அறிவியல், பொது வேதியியல், கணினி பயன்பாட்டியல் மற்றும் புள்ளியல் (ஆங்கில வழி), 5ம் தேதி பி.எஸ்.சி., தொழில் வேதியியல் (ஆங்கில வழி), தாவரவியல் மற்றும் விலங்கியல் (தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி) நடக்கிறது.
9ம் தேதி பி.காம்., (ஆங்கில வழி), பி.ஏ., பொருளியல், பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல் (தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி), பி.ஏ., தமிழ் மற்றும் பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
மாணவர் சேர்க்கைக்கு வரும் மாணவர்கள், இணையவழி விண்ணப்ப நகல், டி.சி., 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த சான்று, ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் ஜெராக்ஸ், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கின் முதல் பக்க ஜெராக்ஸ், இதர சான்றிதழ் அசல், போட்டோ 3 கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.