/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருதையில் கீழே கிடந்த 2 சவரன் நகை; உரியவரிடம் ஒப்படைப்பு விருதையில் கீழே கிடந்த 2 சவரன் நகை; உரியவரிடம் ஒப்படைப்பு
விருதையில் கீழே கிடந்த 2 சவரன் நகை; உரியவரிடம் ஒப்படைப்பு
விருதையில் கீழே கிடந்த 2 சவரன் நகை; உரியவரிடம் ஒப்படைப்பு
விருதையில் கீழே கிடந்த 2 சவரன் நகை; உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : மே 30, 2025 05:55 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கீழே கிடந்த 2சவரன் நகையை, போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 45; இவர் நேற்று முன்தினம் பாலக்கரை பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது, ஒரு மணி பர்ஸ் கீழே கிடந்துள்ளதை எடுத்து திறந்து பார்த்தபோது, 2 சவரன் நகை, 1,500 ரூபாய் ரொக்கம் இருந்தது. அதைத்தொடர்ந்து, அவர் விருத்தாசலம் போலீசாரிடம் அதனை ஒப்படைத்தார். அதன்பேரில், அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சக்திமுருகன் மனைவி மின்னல்கொடி என்பவரின் நகை என்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கவிதா, மின்னல்கொடியிடம் 2 சவரன் நகை மற்றும் 1,500 ரூபாயை ஒப்படைத்தார். கீழே கிடந்த பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த செந்திலை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.