/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் மத்திய சிறையில் கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு கடலுார் மத்திய சிறையில் கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு
கடலுார் மத்திய சிறையில் கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு
கடலுார் மத்திய சிறையில் கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு
கடலுார் மத்திய சிறையில் கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு
ADDED : ஜூலை 01, 2025 02:13 AM

கடலுார்: கடலுார் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் கூடுதல் டி.ஜி.பி.,மகேஷ்வர் தயாள் ஆய்வு மேற்கொண்டார்.
கடலுார் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. கடலுார், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 700 பேர் வரை அனுமதிக்கும் வசதி உள்ளது. இங்கு, நேற்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.,மகேஷ்வர் தயாள் ஆய்வு மேற்கொண்டார். மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பெண்கள் சிறையை மாற்றம் செய்து, புதிதாக வரும் கைதிகளுக்கு தனிச்சிறை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.