/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மங்களூரில் திட்டப் பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வுமங்களூரில் திட்டப் பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு
மங்களூரில் திட்டப் பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு
மங்களூரில் திட்டப் பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு
மங்களூரில் திட்டப் பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 07, 2024 05:39 AM
சிறுபாக்கம்; மங்களூர் ஒன்றியத்தில் நடந்துவரும் திட்டப் பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில,் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடக்கிறது. இதனை, கூடுதல் கலெக்டர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.
சிறுபாக்கம் அடுத்த வினாயகனந்தல் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள், பொயனப்பாடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், கழுதூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை ஆய்வு செய்தார்.
பணிகளை தரமாகவும், விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அதிகாரிகளுக்கு கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டார்.
மங்களூர் பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, வீராங்கன், பொறியாளர்கள் செந்தில்வடிவு, மணிவேல், செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.