/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரம் போஸ்ட் ஆபீசில் கூடுதல் ஆதார் மையம் திறப்பு சிதம்பரம் போஸ்ட் ஆபீசில் கூடுதல் ஆதார் மையம் திறப்பு
சிதம்பரம் போஸ்ட் ஆபீசில் கூடுதல் ஆதார் மையம் திறப்பு
சிதம்பரம் போஸ்ட் ஆபீசில் கூடுதல் ஆதார் மையம் திறப்பு
சிதம்பரம் போஸ்ட் ஆபீசில் கூடுதல் ஆதார் மையம் திறப்பு
ADDED : ஜூன் 29, 2025 03:21 AM
கடலுார் : சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவைக்காக கூடுதலாக மூன்று மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலுார் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கலைவாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. அதன் தொடர்ச்சியாக சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ஏற்கனவே ஒரு மையம் உள்ள நிலையில், கூடுதலாக 3 மையங்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
இங்கு, காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது.
இதில், புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், மொபைல் எண் இணைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. ஆதாரில் திருத்தம் செய்ய 50 ரூபாயும், ஆதார் புதுப்பிக்க 100 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுக்க எவ்வித கட்டணமும் இல்லை. பொதுமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.