/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாவட்டத்தில் 2.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: கலெக்டர் தகவல் மாவட்டத்தில் 2.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் 2.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் 2.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் 2.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: கலெக்டர் தகவல்
ADDED : ஜூன் 29, 2025 03:21 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் குறுவை சம்பா மற்றும் நவரைப் பருவத்தில் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து 2.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2024-25ம் பருவ கால குறுவை, சம்பா மற்றும் நவரைப் பட்டத்தில் இதுநாள் வரை 34,691 விவசாயிகளிடமிருந்து 2,65,872 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.643.11 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவின்படி, கடலுார் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
தற்போது நவரைப் பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பெருமாள் ஏரி மற்றும் வெலிங்டன் ஏரி பாசனம் மூலம் கடலுார், திட்டக்குடி, புவனகிரி, வேப்பூர், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட வட்டங்களில் 33 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகிறது.
நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைக்கு ஏற்ப மேலும் திறக்கப்பட உள்ளது. விவசாயிகளிடம் இருந்து அரசு நிர்ணயத்துள்ள கொள்முதல் விலைப்படி நெல் மூட்டைகள் கொள்முதல் செய்து நெல்லுக்கு உரியதொகை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,84,306 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட1,566 மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்து, மொத்தம் 2,65,872 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.