தவ்ஹீத் ஜமாத் செயல்வீரர்கள் கூட்டம்
தவ்ஹீத் ஜமாத் செயல்வீரர்கள் கூட்டம்
தவ்ஹீத் ஜமாத் செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 07, 2024 06:21 AM
பண்ருட்டி : பண்ருட்டியில் கடலுார் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடந்தது.மாநில செயலாளர் சையதுமுகமது தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் முகமதுயாசீன் வரவேற்றார். நபி இப்ராகீம் செயல் திட்டம் என்ற தலைப்பில் பேசினார். அப்துல் ரஹ்மான், இலியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.மாவட்ட செயலாளர் அப்துல்வஹாப், பொருளாளர் அப்துல்காதர், துணைத் தலைவர் யாசர்அராபத், துணை செயலாளர் உபையதுல்லா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அப்துல்வஹாப் நன்றி கூறினார்.