/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் மாவட்டத்தில் 99.07 டிகிரி வெயில் கடலுார் மாவட்டத்தில் 99.07 டிகிரி வெயில்
கடலுார் மாவட்டத்தில் 99.07 டிகிரி வெயில்
கடலுார் மாவட்டத்தில் 99.07 டிகிரி வெயில்
கடலுார் மாவட்டத்தில் 99.07 டிகிரி வெயில்
ADDED : மே 12, 2025 12:25 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்று 99.07 டிகிரி வெயில் வீசியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.
தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்கியுள்ளது. இந்த காலத்தில்தான் வெப்பம் அதிகளவில் தாக்கும். வழக்கத்தை விட 5 டிகிரி வரை கூடுதல் வெப்ப அலை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நேற்று காலை முதல் வறண்ட வானிலை நிலவியது. நேரம் செல்ல செல்ல வெப்பம் அதிகரித்தது. கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 99.07 டிகிரி வெப்பம் பதிவானது.
இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. வீட்டிலேயே புழுக்கத்தினால் அவதியடைந்த மக்கள் மாலை சில்வர் பீச்சில் குவிந்தனர்.