/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் மாவட்டத்தில் படிக்காதவர்கள் 20,000 பேர்: ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் தகவல் கடலுார் மாவட்டத்தில் படிக்காதவர்கள் 20,000 பேர்: ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் தகவல்
கடலுார் மாவட்டத்தில் படிக்காதவர்கள் 20,000 பேர்: ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் தகவல்
கடலுார் மாவட்டத்தில் படிக்காதவர்கள் 20,000 பேர்: ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் தகவல்
கடலுார் மாவட்டத்தில் படிக்காதவர்கள் 20,000 பேர்: ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் தகவல்
ADDED : ஜூன் 23, 2024 04:35 PM
கடலுார் :கடலுார் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ்ல, 15 வயதுக்கு மேல் எழுத, படிக்க தெரியாதர்வர்கள் எண்ணிக்கை 20,000 பேர் என, கணக்கெடுப்பு பணியில் தெரியவந்துள்ளது.
கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்க மத்திய அரசு, கடந்த 2022ம் ஆண்டு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ், நடப்புக் கல்வியாண்டில் தமிழகத்தில் 15 வயதுக்கு மேல் எழுத, படிக்க தெரியாதவர்களைக் கணக்கெடுக்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் 2024-25ம் கல்வியாண்டிற்கான கணக்கெடுப்பு பணி கடந்த மே மாதம், முதல் வாரத்தில் துவங்கியது.
ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வித் திட்டப் பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என, 5,000 பேர் வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் கடந்த 2023-24ம் கல்வியாண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், எழுத, படிக்க தெரியாதவர்கள் எண்ணிக்கை 19,200 பேர் எனத் தெரியவந்தது. இவர்களுக்கு அவரவர் வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள பள்ளிகளில் மையங்கள் அமைத்து அடிப்படை கல்வி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தை 100 சதவீத எழுத்தறிவித்தல் மாவட்டமாக உருவாக்க நடப்பு 2024-25ம் கல்வியாண்டிற்கான கணக்கெடுப்பு பணி கடந்த மே மாதம் துவங்கியது.
எழுத, படிக்க தெரியாதவர்களின் கணக்கெடுப்பு விவரங்கள் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை மாவட்டம் முழுதும் எழுத, படிக்க தெரியாதவர்கள் எண்ணிக்கை 20,000 பேர் என தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு பணி கடந்த 24ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், கணக்கெடுப்பு பணியை அரசு நீட்டிப்பு செய்துள்ளதால் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இப்பணிகள் முடிந்ததும் அவரவர் வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் மையங்கள் அமைத்து தன்னார்வலர்கள் மூலமாக எழுத கற்றுக் கொடுக்கவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்படும்' என்றார்.