/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 14 கிலோ குட்கா பறிமுதல் கடைக்காரர் கைது 14 கிலோ குட்கா பறிமுதல் கடைக்காரர் கைது
14 கிலோ குட்கா பறிமுதல் கடைக்காரர் கைது
14 கிலோ குட்கா பறிமுதல் கடைக்காரர் கைது
14 கிலோ குட்கா பறிமுதல் கடைக்காரர் கைது
ADDED : செப் 15, 2025 02:24 AM

ராமநத்தம்: ராமநத்தம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற வரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம் அடுத்த வி.சித்துாரில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ராமநத்தம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடததினர்.
இதில், தடை செய்யப்பட்ட 14 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து கடை உரிமையாளர் வி.சித்துார் ராஜா, 31; என்பவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.