/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இடைநிலை ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வு; கடலுாரில் 3 மையத்தில் 849 பேர் பங்கேற்பு இடைநிலை ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வு; கடலுாரில் 3 மையத்தில் 849 பேர் பங்கேற்பு
இடைநிலை ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வு; கடலுாரில் 3 மையத்தில் 849 பேர் பங்கேற்பு
இடைநிலை ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வு; கடலுாரில் 3 மையத்தில் 849 பேர் பங்கேற்பு
இடைநிலை ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வு; கடலுாரில் 3 மையத்தில் 849 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 22, 2024 01:19 AM

கடலுார் : கடலுாரில் மூன்று மையங்களில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வை 849 பேர் எழுதினர்.
கடலுார் மாவட்டத்தில் இடைநிலை கல்வி ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. கடலுாரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி ஆகிய மூன்று மையங்களில் தேர்வு நடந்தது. ஆசிரியர் பயிற்சி பெற்ற 892 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. தேர்வு பொறுப்பு சி.இ.ஓ., அறிவழகன், துவக்க நிலை டி.இ.ஓ., சுகபிரியா தலைமையில் 60 ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்வில் 849 பேர் மட்டுமே பங்கேற்று இடைநிலை ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வு எழுதினர். 43 பேர் ஆப்சென்ட். தேர்வு மையத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது டி.இ.ஓ., சுகபிரியா உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்.