/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை
கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை
கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை
கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை
ADDED : ஜூலை 22, 2024 01:18 AM
விருத்தாசலம் : கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நடந்த ஆடி மாத பவுர்ணமி பூஜையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் ஆடி மாத பவுர்ணமி பூஜை நேற்று நடந்தது.
இதையொட்டி காலை 7:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை, பகல் 1:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
இரவு 9:00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது.
இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.