ADDED : ஜூலை 21, 2024 06:14 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
பண்ருட்டி அடுத்த ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சிவா,38; கூலித் தொழிலாளி. நேற்று காலை 8:00 மணியளவில், மாட்டிற்கு புல் அறுக்க அருகில் அதே பகுதியில் உள்ள விவசாய வயலுக்கு சென்றார். அங்கு புல் அறுத்துக்கொண்டிருந்தபோது, காட்டுபன்றியை கட்டுபடுத்த வைத்திருந்த மின்வேலியில் சிக்கி சிவா இறந்தார்.
தகவலறிந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மாணிக்கம்,44; என்பவரை கைது செய்தனர்.