/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புவனகிரியில் மகளிர் கல்லுாரி அரசுக்கு வலியுறுத்தல் புவனகிரியில் மகளிர் கல்லுாரி அரசுக்கு வலியுறுத்தல்
புவனகிரியில் மகளிர் கல்லுாரி அரசுக்கு வலியுறுத்தல்
புவனகிரியில் மகளிர் கல்லுாரி அரசுக்கு வலியுறுத்தல்
புவனகிரியில் மகளிர் கல்லுாரி அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : ஜூன் 26, 2024 02:30 AM
புவனகிரி : புவனகிரியில் ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
வட்ட தலைவர் முத்தமிழ்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வீரநாராயணன் சங்க கொடியேற்றினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சண்முகம் வரவேற்றார். அண்ணாதுரை தீர்மானங்கள் வசித்தார். மாவட்ட துணைத் தலைவர் பத்மநாபன் துவக்கவுரையாற்றினார். வட்ட செயலாளர் சண்முகம் வேலை அறிக்கை வாசித்தார். நிதிநிலை அறிக்கையை வைத்தியநாதன் சமர்ப்பித்தார்.
கூட்டத்தில், புவனகிரியில் தனி கருவூலம், மகளிர் கல்லுாரி, தீயணைப்பு நிலையம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்துவது. சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், செவிலியர்களுக்கு மருத்துவ காப்பீடு நிலுவைகள் வழங்க வேண்டும். புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசிடம் கோரிக்கை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வட்ட செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.