ADDED : ஜூன் 26, 2024 02:29 AM
திட்டக்குடி : திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் ஞானகுரு வித்யாலயாவின் 25ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனர் கோடி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் அய்யாதுரை வரவேற்றார். திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில், துணை பேராசிரியர்கள் கருணாகரன், தமிழ்ச்செல்வன், சாந்தகுமாரி, ராஜபிரியா ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினர். விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், திட்டக்குடி தாசில்தார் அந்தோணிராஜ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, யோகாவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.